பொள்ளாச்சி அருகே குறுகலான ரோட்டால் வாகன ஓட்டிகள் அவதி

18 hours ago 2


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையத்திலிருந்து பல்வேறு கிராமங்கள் வழியாக பாலக்காடு ரோடு நல்லூத்துக்குழிக்கு செல்லும் சாலையில், பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து தொடர்ந்து உள்ளது. இப்பகுதியில் ஆங்காங்கே கிராமங்கள் பல இருப்பதால் பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் மற்றும் அனைத்து ரக வாகனங்களின் போக்குவரத்தும் அதிகம் உள்ளது. ஆனால் இந்த வழித்தடத்தின் பல இடங்களில் ரோடு குறுகலாக உள்ளது. அதிலும் பொன்னாயூர், ஆத்துப்பொள்ளாச்சி, ராசிசெட்டிபாளையம் செல்லும் ரோட்டில் ஆங்காங்கே உள்ள சிறுபாலங்கள் குறுகலாக உள்ளது.

மேலும், அடுத்தடுத்துள்ள வளைவான பகுதியும் குறுகலாக இருப்பதால், எதிர் திசையில் வரும் வாகனங்கள் எதுவென்று தெரியாத நிலை ஏற்படுகிறது. பாலக்காடு ரோடு மற்றும் மீன்கரை ரோட்டை இணைக்கும் முக்கிய சாலையான, குறுகலான இந்த ரோட்டை அகலப்படுத்தி வாகனங்கள் விரைந்து செல்லவும், விபத்து நேரிடுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

The post பொள்ளாச்சி அருகே குறுகலான ரோட்டால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article