சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் பதிலடி கொடுத்துள்ளார். சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது;
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி: முதல்வர்
பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. துயரமான ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி. அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். சட்டம் ஒழுங்கு குறித்து பேச அதிமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலடி
ஊழல் வழக்குகளில் இருந்து தற்காத்துக் கொள்ள தமிழக உரிமைகளை அடகு வைத்தவர்கள். கடந்த 12 ஆண்டுகளில் 2024-ம் ஆண்டில்தான் கொலைகள் குறைவாக நடந்துள்ளன. 15,892 பேர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திமுக ஆட்சியில் காவல்துறை மரணங்கள் அடியோடு குறைக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவித்தார்.
2000 காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்: முதல்வர்
2000 காவலர் பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 3 ஆண்டுகளில் 16,199 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் 1.87 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
சாலை விபத்துகள் தொடர்ந்து குறைந்து வருகிறது: முதலமைச்சர்
சாலை விபத்துகள் தொடர்ந்து குறைந்து வருவது பாராட்டுக்குரியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
The post பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி; அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி: எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலடி..!! appeared first on Dinakaran.