‘பொறுமையை சோதிக்காதீர்’- ஆர்எஸ்எஸ் ஊர்வல வழக்கில் போலீஸுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை

6 months ago 40

சென்னை: “ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதியளிக்கும் விவகாரத்தில் பொறுமையை சோதிக்க வேண்டாம்,” என போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு வரும் அக்.6-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதியளிக்கக் கோரி ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.இந்த வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், “தமிழகம் முழுவதும் மொத்தம் 58 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரப்பட்ட நிலையில், 42 இடங்களில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 16 இடங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஒரே மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரப்பட்டதால் பாதுகாப்பு பிரச்சினைகளுக்காக அங்கு அனுமதி வழங்கப்படவில்லை,” என்றார்.

Read Entire Article