பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு: முதல் சுற்று நேற்று தொடங்கியது

4 hours ago 3

சென்னை: பொறியியல் பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இந்த கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. பொதுப்பிரிவில், தரவரிசை பட்டியலில் முதல் 39 ஆயிரத்து 145 இடங்கள் பிடித்த மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை வருகிற 16ம் தேதி வரை தேர்ந்தெடுக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் தரவரிசை பட்டியலில் முதல் 2 ஆயிரத்து 662 இடங்களை பிடித்த மாணவர்களும், தொழிற்கல்வி மாணவர்களுக்கான தரவரிசையில் முதல் 2 ஆயிரத்து 342 இடங்களை பிடித்த மாணவர்களும் வருகிற 16ம் தேதி வரை தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்ந்தெடுக்கலாம்.

விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு ஆணை வருகிற 17ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். இறுதி ஒதுக்கீடு ஆணை வரும் 19ம் தேதி வெளியிடப்படும். இறுதி ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் ஜூலை 23ம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். பின்னர், 2ம் சுற்று ஜூலை 26ம் தேதியும், 3ம் சுற்று ஆகஸ்ட் 7ம் தேதியும் நடைபெற உள்ளது.

The post பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு: முதல் சுற்று நேற்று தொடங்கியது appeared first on Dinakaran.

Read Entire Article