பொறியியல் படிப்புக்கு நாளை தரவரிசை பட்டியல்

1 week ago 3

சென்னை: நடப்பாண்டு பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். இந்த இடங்களில் நடப்பு கல்வியாண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 7 தேதி தொடங்கி ஜூன் 6ம் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 பேர் விண்ணப்பம் பதிவுசெய்துள்ளனர். அவர்களில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 883 பேர் மட்டுமே விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். விண்ணப்பக் கட்டணம் செலுத்தியவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

கடைசி நாள் நிலவரப்படி, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்திய மாணவர்களில் 2 லட்சத்து 26 ஆயிரத்து 359 பேர் தேவையான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு ஜூன் 11ம் தேதி ஆன்லைனில் ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நாளை (ஜூன் 27) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனை உயர்க்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிடவுள்ளார். அன்றய தினமே கலந்தாய்வு தொடங்கும் நாளும் அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post பொறியியல் படிப்புக்கு நாளை தரவரிசை பட்டியல் appeared first on Dinakaran.

Read Entire Article