திருமயம் குறுவட்ட கோகோ போட்டியில் வார்பட்டு அரசு பள்ளி மாணவிகள் முதலிடம்

8 hours ago 3

 

பொன்னமராவதி, ஜூலை 6: பொன்னமராவதி அடுத்த வார்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் திருமயம் குறுவட்ட அளவிலான கோகோ போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் மொகைதீன் அப்துல் காதர் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருமயம் குருவட்ட அளவிலான கோ-கோ போட்டி நடைபெற்றது. 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் பிரிவில் வார்ப்பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதில், வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுப்பையா, உடற்கல்வி ஆசிரியர் பழனிச்சாமி உள்ளிட்ட இருபால் ஆசிரியரகள் பொதுமக்கள் பாராட்டினர். மேலும், வெற்றி பெற்ற மாணவிகள் வருவாய் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

The post திருமயம் குறுவட்ட கோகோ போட்டியில் வார்பட்டு அரசு பள்ளி மாணவிகள் முதலிடம் appeared first on Dinakaran.

Read Entire Article