பொருளாதார வளர்ச்சி உள்பட பல துறைகளில் தமிழ்நாடு முதலிடம்! - தமிழக அரசு பெருமிதம்

19 hours ago 3

சென்னை: பொருளாதார வளர்ச்சி, உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை, தொழில் ஒப்பந்தங்கள், மின்னணு ஏற்றுமதி, வேலைவாய்ப்புகளை வழங்குதல் என பலவற்றில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ஆம் ஆண்டு மே 7-ஆம் நாள் முதல்வராக பொறுப்பேற்றார். அப்பொழுது கரோனா தொற்று தமிழ்நாட்டை ஆட்டிப்படைத்தது. உயிர்ப்பலிகள் வாங்கியது. கரோனா தொற்று ஏற்படும்போது அச்சத்தில் ஒருவருடன் ஒருவர் சந்திப்பதைக்கூடத் தவிர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. முதல்வர் ஸ்டாலின் அச்சம் சிறிதுமின்றி, கரோனா ஒழிப்பில் ஈடுபட்டு மக்களைப் பாதுகாத்த மகத்தான பணிகளை பத்திரிகைகள் பாராட்டின.

Read Entire Article