பொருளாதார மற்றும் நிதிசார் பேச்சுவார்த்தை கூட்டத்தில் பங்கேற்க நிர்மலா சீதாராமன் லண்டன் பயணம்

1 month ago 7

லண்டன்,

மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறைக்கான மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை முதல் 13-ந்தேதி வரையிலான நாட்களில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

இதனை மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது. இங்கிலாந்தின் லண்டன் நகரில் 9-ந்தேதி (நாளை மறுநாள்), இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் பொருளாதார மற்றும் நிதிக்கான மந்திரிகள் மட்டத்திலான 13-வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற முடிவாகி உள்ளது.

சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில் அவர் முக்கிய உரையாற்ற உள்ளார். அதனுடன் அந்த நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள், வர்த்தக தலைவர்களுடன் இருதரப்பு கூட்டங்களையும் நடத்துகிறார். மந்திரிகள் மட்டத்தில், அதிகாரிகள் மட்டத்தில், பணியாளர் குழுக்கள் மட்டத்தில் வெளிப்படையாக சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடு என இரு நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு தளம் என்ற அளவில் இந்த 13-வது சுற்று பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

இதுதவிர, முதலீட்டு விவகாரங்கள், நிதி சேவைகள், நிதிசார் ஒழுங்குமுறைகள், யு.பி.ஐ. இணைப்புகள், வரிவிதிப்பு விவகாரங்கள் மற்றும் சட்டவிரோத பண புழக்கங்கள் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களிலான நிதிசார்ந்த ஒத்துழைப்பில் ஒழுங்குமுறை அமைப்புகளுடனும் சந்தித்து பேசுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.

இதனுடன், முக்கிய அதிகாரிகள், முதலீட்டுக்கான வட்டமேஜை சந்திப்புகள் மற்றும் முக்கிய நிதி அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்களுடனும் பிற கூட்டங்களை அவர் நடத்துகிறார். ஆஸ்திரிய பயணத்தில், அந்நாட்டின் நிதி மந்திரி மார்கஸ் மார்டர்பாயர் உள்ளிட்ட மூத்த அரசு தலைவர்களுடன் இருதரப்பு கூட்டங்களையும் நடத்துவார்.

Read Entire Article