''பொய்யின் விளைவை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா?'' - நீட் அச்சத்தால் மாணவர் இறந்ததை அடுத்து இபிஎஸ் கேள்வி

6 hours ago 1

சென்னை: நீட் தேர்வு அச்சம் காரணமாக சேலம் அருகே மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், "ஒரு பொய்யின் விளைவு என்ன என்பதை இப்போதாவது ஸ்டாலின் உணர்வாரா?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாணவர் கவுதம், நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

Read Entire Article