பொய்கை கால்நடை சந்தையில் மாடுகள் வரத்து சரிவு: ரூ.55 லட்சம் வரை விற்பனை

6 months ago 16

வேலூர்: வேலூர் அடுத்த பொய்கை கால்நடை சந்தையில் இன்று மாடுகள் வரத்து குறைந்தது. அதே நேரத்தில் விற்பனையும் கடந்த வாரத்தை போலவே ரூ.55 லட்சம் வரை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர். வேலூர் அடுத்த பொய்கை கால்நடை சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. தற்போது மழை பெய்து வருவதால் தீவனங்கள் தட்டுப்பாடு இன்றி கிடைத்து வருகிறது. இதனால் கால்நடைகள் வரத்து என்பது தொடர்ந்து பொய்கை சந்தையில் அதிகரித்து வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 2 வாரங்களாக சண்டைக்கோழி, நாட்டுக்கோழி, வான்கோழி என கோழிகளின் விற்பனை அதிகரித்து காணப்பட்டது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில் கடந்த வாரம் நடந்த சந்தையில் விற்பனை ரூ.60 லட்சம் வரை ஆனது. இந்த வாரம் கால்நடைகள் வரத்து சற்று குறைந்த நிலையில் விற்பனையும் ரூ.55 லட்சம் ஆனது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பொய்கை கால்நடை சந்தைக்கு வரத்து கடந்த வாரங்களை போலவே இந்த வாரமும் குறைந்தே காணப்பட்டது. இதனால் விற்பனையும் ரூ.55 லட்சத்துக்கு விற்பனையானது. அதேநேரத்தில் பிற கால்நடைகள் விற்பனையும் களைக்கட்டியது. வரும் வாரங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post பொய்கை கால்நடை சந்தையில் மாடுகள் வரத்து சரிவு: ரூ.55 லட்சம் வரை விற்பனை appeared first on Dinakaran.

Read Entire Article