பொம்மராஜபுரம் கிராமத்தில் ரூ.1.16 கோடியில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்: அணுமின் நிலைய இயக்குநர் அடிக்கல்

2 months ago 9

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லாத்தூர் ஊராட்சி, பொம்மராஜபுரம் கிராமத்தில் அரசினர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு, கல்பாக்கத்தில் இயங்கி வருகின்ற சென்னை அணுமின் நிலையம் சார்பில் ரூ.1 கோடியே 16 லட்சம் மதிப்பிலான 4 வகுப்பறைகள் கொண்ட தரைதளம் மற்றும் மேல் தளத்துடன் கூடிய கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரமிளா சிவா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சென்னை அணுமின் நிலைய இயக்குநர் சேஷய்யா கலந்துகொண்டு, ரூ.1.16 கோடி செலவில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான பணியினை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அணுமின் நிலைய சமூக பொறுப்பு குழு தலைவர் நரசிம்மராவ், மனிதவள துணை பொது மேலாளர் வாசுதேவன், மனிதவள மேலாளர் ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post பொம்மராஜபுரம் கிராமத்தில் ரூ.1.16 கோடியில் அரசு பள்ளிக்கு கூடுதல் கட்டிடம்: அணுமின் நிலைய இயக்குநர் அடிக்கல் appeared first on Dinakaran.

Read Entire Article