
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவாயர்பாடியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 13-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு வழிபாடுகள் வாகன சேவைகள் நடைபெறுகின்றன.
விழாவின் ஐந்தாம் நாளான நேற்று கருடோற்சவ அரிஅரன் சந்திப்பு விழா நடைபெற்றது. கரிகிருஷ்ணப் பெருமாளும் அகத்தீஸ்வரரும் சந்திக்கும் இந்த பாரம்பரிய நிகழ்வானது, பரத்வாஜ முனிவர் ஆசிரமம் முன்பாக வாண வேடிக்கையுடன் நடைபெற்றது . கருட வாகனத்தில் பெருமாளும் நந்தி வாகனத்தில் சிவனும் சந்தித்த காட்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.