
பொன்னேரி அடுத்த திருவாயர்பாடியில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 13-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு வழிபாடுகள் வாகன சேவைகள் நடைபெறுகின்றன.
விழாவின் 4-வது நாளான இன்று சேஷ வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை சந்திப்பு பெருவிழாவும், 19-ம் தேதி தேர் திருவிழாவும் நடைபெறுகின்றன.