பந்தலூர்,பிப்.24: பந்தலூர் அருகே பொன்னானி பகுதியில் நடைபாதை துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பொன்னானி முதல் அம்மங்காவு செல்லும் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொன்னானி அரசு பழங்குடியினர் பள்ளி அருகே அப்பகுதி மக்கள் பயன்படுத்திவரும் காங்கிரீட் நடைபாதை செல்கிறது.
இந்நிலையில் காங்கிரீட் நடைபாதை அருகில் பிரதான சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கும் போது காங்கிரீட் நடைபாதை உடைக்கப்பட்டுள்ள இடத்தில் தற்போது குழியாக இருப்பதால் நடைபாதையை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடைபாதை துண்டிக்கப்பட்டுள்ளதால் ஊருக்குள் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்கள் சென்று வர முடியாமல் உள்ளது.எனவே பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நடைபாதையை சீரமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பொன்னானி பகுதியில் நடைபாதை துண்டிப்பு appeared first on Dinakaran.