பொன்னமராவதியில் பெரிய நூலகம் அமைக்க கோாிக்கை

2 weeks ago 2

பொன்னமராவதி,ஜன.22: பொன்னமராவதியில் நூலகத்துறையின் நூலகம் பேரூராடசியின் எதிர்புறம் செயல்பட்டு வருகின்றது. 42 கிராம ஊராட்சிகளை சேர்ந்த இளைஞர்கள், மற்றும் பேரூராட்சியின் இளைஞர்கள் மாணவர்கள் நலனிக் அக்கரை கொண்டு பொன்னமராவதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நூலகம் அமைக்க வேண்டும். அந்த நூலகத்தில் அரசு போட்டித்தேர்வுகளுக்கு செல்லும் இளைஞர்களுக்கு இலவச பயிற்சி வழங்க வேண்டும்.

இவ்வாறு வழங்குவதன் மூலம் பொன்னமராவதி பகுதியில் உள்ள அதிக அளவு இளைஞர்கள் அரசுப் பணிக்கு செல்ல ஏதுவாக இருக்கும் எனவே பொன்னமராவதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய நூலகம் அமைக்க வேண்டும் என இப்பகுதி இளைஞர்கள், மாணவர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னமராவதியில் பெரிய நூலகம் அமைக்க கோாிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article