பொன்னமராவதி அருகே மழைபெய்யாததால் கையால் இறைத்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிய விவசாயிகள்

6 months ago 26

 

பொன்னமராவதி, அக்.17: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே பழங்கால முறையில் நெல் வயலில் தண்ணீர் இறைத்து வயிலுக்கு பாய்ச்சும் இளம் விவசாயிகள் பொன்னமராவதி பகுதியில் அதிக அளவு நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. கிணற்றுப்பாசனம், கண்மாய் பாசனம், மழையினை நம்பி என மூன்று வகையில் நெல் நடவு செய்யப்படுவது இப்பகுதியில் வழக்கமாக உள்ளது. கிணறு மற்றும் போர்வெல்களில் மோட்டார் மூலம் செய்யப்படும் பாசனம், கண்மாய் மடையில் இருந்து தண்ணீர் எடுத்து பாசனம், இதனை தவிர்த்து மழை வந்தால் மட்டுமே வயலுக்கு தண்ணீர் வரும் பாசனம் என நெல் நடவு செய்த விவசாயிகளில் மழையை நம்பி நடவு செய்த விவசாயிகளுக்கு மழை இல்லாமல் தூரல் மழையாகவே பெய்தது. இதனால் தாங்கள் சாகுபடி செய்ய, நெற்பயிரை நடவு செய்ய பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம், புதுப்பட்டி கிராமத்தில் போதிய மழை இல்லாத காரணத்தால் மழையினை நம்பி நெல் நடவு செய்ய முடியாத விவசாயிகள் பல்வேறு வகையில் தண்ணீர் பாய்ச்சி நடவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் அங்குள்ள சின்னக்கருப்பன் என்ற விவசாயி சாலை ஓரம் கிடந்த தண்ணீரை பழைய நீர் பாய்ச்சும் முறையான கையால் இறைத்தல் முறையில் நெல் நடவுக்கு நீர் இறைத்து பாய்ச்சினார். எத்தனை புதிய வழிமுறைகளில் தண்ணீர் பாய்ச்சினாலும் பழைமை மாறாமல் ஒரு சில இடங்களில் இதுபோன்று கிராம வழக்கில் எராப்பெட்டி, இரவா பெட்டி மூலம் தண்ணீரை பாய்ச்சும் முறை இன்னும் இருக்கத்தான் செய்கின்றது. தமிழகத்தில் பழைமை கொஞ்சம் மாறலாம் அழியாது என்பது இது ஒரு உதாரணம்.

The post பொன்னமராவதி அருகே மழைபெய்யாததால் கையால் இறைத்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சிய விவசாயிகள் appeared first on Dinakaran.

Read Entire Article