ஆத்தூர் ஜி.ஹெச்.,ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம்

3 hours ago 2

நரசிங்கபுரம், மே 15:அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளையொட்டி, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கடந்த 12ம்தேதி பிறந்த ஆண், பெண் குழந்தைகள் 10 பேருக்கு ஒரு கிராம் தங்க மோதிரம், கால் கொலுசு, ஹாட் பாக்ஸ் மற்றும் பழங்கள் உள்ளிட்டவை நேற்று வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் செம்மலை, ஆத்தூர் எம்எல்ஏ ஜெய்சங்கரன், கெங்கவல்லி எம்எல்ஏ நல்லதம்பி, சேலம் மாவட்ட மகளிரணி செயலாளர் லலிதா சரவணன், பத்மா, மங்கலம், ஆத்தூர் நகரச் செயலாளர் மோகன், மணிவண்ணன், மலைபெருமாள், காளிமுத்து, இளவரசன், பாலமுருகன், முரளி, ஜோதி பிரசாந்த், சின்னசாமி, ராமலிங்கம், ரெமோ, முன்னாள் எம்எல்ஏ சின்னத்தம்பி, செல்வமணி, பார்த்தசாரதி, கதிரேசன், கண்ணன், மணி மற்றும் நகர, ஒன்றிய, மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post ஆத்தூர் ஜி.ஹெச்.,ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்கமோதிரம் appeared first on Dinakaran.

Read Entire Article