பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை அதிகாரிகளுக்கு திட்ட இயக்குனர் உத்தரவு வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து

1 week ago 2

கலசபாக்கம், பிப். 1: வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளுக்கு திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் நேற்று கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் திட்ட இயக்குனர் ரா.மணி நேற்று பில்லூர் பழங்கோயில் பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடைபெற்று வரும் கலைஞர் கனவு இல்லம் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம், தொகுப்பு வீடுகள் பழுது பார்க்கும் பணிகள், சுகாதார வளாகம் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்குமாறு ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் பணிகளை விரைந்து முடிக்குமாறும் பயனாளிகளுக்கு உடனுக்குடன் பில் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், அதேபோல் சிமெண்ட் மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு இல்லாமல் பயனாளிகளுக்கு வழங்கிட வேண்டும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது பிடிஓக்கள் பாலமுருகன் அண்ணாமலை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் உடன் இருந்தனர்.

The post பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துரித நடவடிக்கை அதிகாரிகளுக்கு திட்ட இயக்குனர் உத்தரவு வளர்ச்சி பணிகளை விரைந்து முடித்து appeared first on Dinakaran.

Read Entire Article