பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வீடு கட்டி குடியேற நிதியை உடனே ஒதுக்கி சிரமத்தை குறைக்க வேண்டும்: அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல்

2 months ago 13

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு மொத்த தொகையாக மூன்று லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதில் கழிப்பறை கட்டுவதற்காக 12 ஆயிரம் ரூபாயும், மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி செய்யும் நபருக்கு 314 ரூபாய் விதம் 90 நாட்களுக்கு 28 ஆயிரத்து 260 ரூபாயும், மீதமுள்ள மூன்று லட்சத்து பத்தாயிரம் ரூபாய் 4 கட்டங்களாக வீடு கட்டும் நபருக்கு கொடுக்கப்படும்.

இவ்வாறு கட்டப்படக்கூடிய வீடுகளுக்கு முதல் கட்டப் பணி முடிந்த உடன், வரவு, செலவு கணக்குகளை ஒப்படைத்தவுடன் நிதி ஒதுக்கப்பட வேண்டும். ஆனால் மூன்றாவது கட்ட பணி முடிந்த பின்னும், முதல் கட்ட பணிக்கான பில்லுகளுக்கான தொகையினை கொடுக்காமல் தாமதப்படுத்துகிறார்கள். இது வாங்குவதற்கு பல பிரச்சனைகளை சந்திக்கும் அவல நிலை உள்ளது.

கலைஞரின் கனவு இல்ல திட்டத்திற்கு அரசு சிமெண்ட் பயன்படுத்துவதால் சிமெண்ட் விலை மற்ற சிமெண்ட்களை காட்டிலும் குறைவாக இருந்தால் அனைத்து பொதுமக்களும் பயன்படும் வகையில் அமையும். எனவே அரசு உடனடியாக சிமெண்ட் விலையை குறைக்க வேண்டும்.

அதேபோல் இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டும் ஏழை, எளிய மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கட்டுமான தொகைக்காக பில்லுகளோடு பல நாட்கள் அலைய விடுவது மிகவும் மோசமான செயலாகும். பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வீடு கட்டி குடியேற, உடனே நிதியினை ஒதுக்கி மக்களின் சிரமத்தை குறைக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிதியின் மூலம் பொதுமக்கள் எந்த சிரமமும் இல்லாமல் வீடு கட்டி குடியேற இந்த அரசு ஆவன செய்ய வேண்டும்.

The post பொதுமக்கள் சிரமம் இல்லாமல் வீடு கட்டி குடியேற நிதியை உடனே ஒதுக்கி சிரமத்தை குறைக்க வேண்டும்: அரசுக்கு பிரேமலதா வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article