சேலம், பிப்.7: சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவர், மருத்துவமனைக்கு வந்திருந்த வயதான முதியவரை ஆபாச வார்த்தையில் திட்டி மிரட்டும் வீடியோ, கடந்த சில நாட்களாக முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வளைதளங்களில் பரவி வருகிறது. அந்த வீடியோவில் வயதான முதியவரை மருத்துவமனையின் உள்ளே அனுமதிக்காமல், மிகவும் அருவருக்கத்தக்க வகையில், ஆபாச வார்த்தையில் பாதுகாவலர் பேசி உள்ளார். இதுகுறித்து மருத்துவமனையின் டீன் தேவிமீனாள் கூறுகையில், ‘சேலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவர், நோயாளிகளிடம் மரியாதை குறைவாக பேசும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இது கடந்த 2019ம் ஆண்டு பணியில் இருந்த தனியார் நிறுவன பாதுகாவலர், நோயாளிகளிடம் தரக்குறைவாக பேசியதற்காக, அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். அந்த வீடியோவை, தற்போது நடந்த சம்பவம் போன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருவது பழைய வீடியோ ஆகும்,’ என்றார்.
The post பொதுமக்களை பாதுகாவலர் மிரட்டும் வீடியோ பழையது appeared first on Dinakaran.