பாவூர்சத்திரம், மே 6: ஆவுடையானூர் ஊராட்சி பொடியனூரில் நடந்த முதல்வர் பிறந்த தின கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு முன்னாள் மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் பரிசு வழங்கினார். திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த தினத்தையொட்டி கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம், ஆவுடையானூர் ஊராட்சி திமுக சார்பில் பொடியனூரில் மின்னொளி கபடி போட்டி நடந்தது. துவக்க விழாவிற்கு விவசாய அணி மாநில துணை அமைப்பாளர் செல்லப்பா தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் சீனித்துரை வரவேற்றார். போட்டியில் புளியங்குடி அணி முதல்பரிசையும், பொடியனூர் அணி 2வது பரிசையும், மயிலப்பபுரம் அணி 3வது பரிசையும். ஆவுடையானூர் அணி 4வது பரிசையும், கொண்டலூர் அணி 5வது பரிசையும் வென்றன. பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன், வெற்றிக்கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். நிகழ்வில் உதயநிதி நற்பணி மன்ற தலைவர் வைரசாமி, ஓய்வுபெற்ற எஸ்ஐ சண்முகராஜன் மற்றும் பக்தர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர்.
The post பொடியனூரில் கபடி போட்டி பரிசளிப்பு விழா appeared first on Dinakaran.