பொங்கல் பண்டிகையை முன்னிட்டு‘சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’: கலைக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம்

1 month ago 5

சென்னை: தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில், ஜனவரி-2025 பொங்கல் பண்டிகையின்போது தமிழ்நாட்டின் நாட்டுப்புற கலைகள், அயல் மாநில நாட்டுப்புற கலைகள், செவ்வியல் கலைகள் இடம் பெறும் வகையில் பிரமாண்ட சங்கமம்-நம்ம ஊரு திருவிழா சென்னையின் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையால் நேரடியாக நடத்தப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மற்ற 8 இடங்களிலும் மண்டல கலை பண்பாட்டு மையங்களின் வாயிலாக கலைவிழாக்கள் இந்த நிதியாண்டிற்குள் நடத்தப்படும்.

‘சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’வில் பங்கு பெற விரும்பும் கலை குழுக்கள் தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் வகையில் 5 நிமிட வீடியோவை குறுந்தகடு அல்லது பென் டிரைவ்-ல் பதிவு செய்து, அத்துடன் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளத்தில் (www.artandculture.tn.gov.in) வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தில் கோரியுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தொடர்புடைய கலை பண்பாட்டுத்துறையின் மண்டல கலை பண்பாட்டு மைய அலுவலகங்களுக்கு 10.12.2024ம் தேதிக்குள் பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும். ஒரு குழுவில் இடம் பெற்ற கலைஞர்கள் வேறு எந்த குழுவிலும் பங்கேற்கக் கூடாது. கலை பண்பாட்டு துறையால் அமைக்கப்படும் தேர்வுக்குழுவால் தகுதியான கலைக்குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு, ‘சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’வின் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வாய்ப்புகள் அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு‘சங்கமம்- நம்ம ஊரு திருவிழா’: கலைக் குழுக்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Read Entire Article