பொங்கல் பண்டிகை: சென்னையில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கம்

9 hours ago 3

சென்னை,

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால், அனைவரும் புத்தாடைகள் மற்றும் பொங்கலிட தேவையான பொருட்களை வாங்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதைபோல வெளியூர்களில் வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு செல்லவும் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட வசதியாக தமிழகம் முழுவதும் 25 ஆயிரத்து 752 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன. மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் பஸ், ரெயில் முனையங்களுக்கு வசதியாக செல்லவும் நாளை முதல் (வெள்ளிக்கிழமை) 13-ம் தேதி வரை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு பஸ் நிலையம், கிளாம்பாக்கம் பஸ் நிலையம், மாதவரம் புறநகர் பஸ் நிலையம் ஆகிய 3 இடங்களில் இருந்து சிறப்பு இணைப்பு பஸ்கள் புறப்படுகின்றனர்.

2025- பொங்கல் திருநாளை முன்னிட்டு, 10.01.2025 முதல் 13.01.2025 வரை மாநகர் போக்குவரத்துக் கழகம் கூடுதலாக 320 சிறப்பு இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.-மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அவர்களின் தகவல்.#MTCChennai | #MTC4Chennai | #ChennaiBus | #MTCBus | #Chennai |… pic.twitter.com/tdC37GQPVr

— MTC Chennai (@MtcChennai) January 9, 2025
Read Entire Article