போபால்,
மத்திய பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள அஜய்கர் பகுதியை சேர்ந்தவர் சுஷில் குமார் சுக்லா. இவர் தனது மகளின் பிறந்தநாள் விழாவிற்காக விருந்தினர்களை அழைப்பதற்கு சாலையோரமாக நடந்து சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக காவல்துறை வாகனத்தில் சென்ற போலீசார் அவரை தடுத்தி நிறுத்தியதாகவும், பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று சிறிது நேரம் காவலில் வைத்துவிட்டு, ஹெல்மெட் அணியவில்லை எனக்கூறி ரூ.300 அபராதம் விதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்த சுஷில் குமார் சுக்லா, இந்த சம்பவம் குறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அஜய்கர் துணை பிரிவு காவல் அதிகாரி ராஜீவ் சிங் பதோரியா தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டுள்ளார்.