பொங்கல் பண்டிகை: கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கம்

4 hours ago 2

சென்னை

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை 14-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசு ஜனவரி 14-ந்தேதி முதல் 19-ந்தேதி வரையிலான 6 நாட்களுக்கு அரசு விடுமுறையை அறிவித்து உள்ளது.

தொடர் விடுமுறையை அடுத்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, வெளியூரில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.

இதனால் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வழக்கமான பேருந்துடன் கூடுதலாக பேருந்துகள் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே 2 டிக்கெட் கவுன்ட்டர் இருந்த நிலையில் தற்போது கூடுதலாக 7 முன்பதிவு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. தற்போது 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் தயார் நிலையில் உள்ளன. பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே தானியங்கி பயணச்சீட்டு எந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளது.

Read Entire Article