பொங்கல் திருநாளை முன்னிட்டு விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்: திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்

4 months ago 14

கள்ளக்குறிச்சி: பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோவிலூர் அருகே 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தை திருநாளா பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். பொங்கல் திருநாளில் மண்பாண்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதையொட்டி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள ஆவியூர், சித்தலிங்க மடம், பிள்ளையார் பாளையம், பாடியந்தல், வீரங்கிபுரம், வடபழையனூர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்டங்கள் செய்யும் தொழில் சூடுபிடித்துள்ளது.

தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக ரூ.5000 வழங்குவதாகவும், இந்த ஆண்டுகான மழைக்கால நிவாரணத்தை அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர். வருடத்தில் பொங்கல் தினத்தன்று மட்டும் மண்பாண்ட பொருட்கள் பலரது கவனத்தை ஈர்த்தாலும் மற்ற நாட்களில் மண்பாண்டங்களுக்கு எதிர்பார்ப்பு கிடைக்காது. ஆகையால் தங்களது வாழ்வாதாரம் மேம்பட அரசு உதவ வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post பொங்கல் திருநாளை முன்னிட்டு விறுவிறுப்பாக நடைபெறும் பணிகள்: திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article