சென்னை: கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள் என பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியுள்ளார். 10, 11ம் வகுப்புக்களில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெற முடியாதவர்கள் மனம் தளர வேண்டாம், அடுத்தடுத்த தேர்வுகள் உள்ளன. அவற்றை பயன்படுத்திக் கொண்டு தேர்ச்சி பெறுங்கள் எனவும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
The post கல்வியை இறுகப் பற்றிக்கொண்டு முன்னேறுங்கள்: பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.