பொக்ரானில் 3 ஏவுகணைகள் சோதனை வெற்றி

3 hours ago 3

புதுடெல்லி,

ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் துப்பாக்கி சூடு தளத்தில், நேற்று ஏவுகணைகள் சோதனை நடந்தது. அப்போது குறுகிய தூர வான் இலக்குகளை தாக்கும் 3 ஏவுகணைகள் சோதித்து பார்க்கப்பட்டன. விசூரத்ஸ் என்று அழைக்கப்படும் இந்த ஏவுகணைகள் 4-வது தலைமுறை தொழில்நுட்பத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) மற்றும் இந்திய ராணுவம் இணைந்து இந்த ஏவுகணை சோதனையை நடத்தின. சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டது.

"டி.ஆர்.டி.ஓ., 4-வது தலைமுறை அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்ட ஏவுகணைகளுடன் கூடிய 3 விமானங்களை வெற்றிகரமாக இயக்கி சோதனை நடத்தியது" என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு உள்ளார். அவர் ஆய்வுக் குழுவினருக்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

விசூரத்ஸ் ஏவுகணைகள், எளிதில் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த கூடிய சிறிய வகை ஏவுகணையாகும். பல்வேறு நவீன தொழில்நுட்பங்களும் அதில் உள்ளன என்று ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.

Read Entire Article