பைபைக் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு

3 months ago 22

உளுந்தூர்பேட்டை, அக். 10: பைக் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி காயிதே மில்லத் தெருவில் வசித்து வருபவர் செல்லபெருமாள் (57). இவர் நேற்று காலை உளுந்தூர்பேட்டை அருகே மூலசமுத்திரம் தக்கா பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்துக்கு தனது பைக்கில் சென்றுள்ளார். வேலை முடித்துவிட்டு திரும்பி வர செல்லபெருமாள் தனது பைக்கை ஸ்டார்ட் செய்த போது திடீரென புகை வந்ததால் அச்சமடைந்து கீழே இறங்கி பார்த்தபோது திடீரென இருசக்கர வாகனம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

அதனால் பதற்றம் அடைந்து, அங்கிருந்து சிறிது தூரம் வருவதற்குள் வேகமாக தீ பரவி புகை மூட்டத்தோடு எரிய ஆரம்பித்ததால் மின்வாரிய அலுவலகப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையிலான குழுவினர் தீயை அணைத்தனர். மின்வாரிய அலுவலகத்தின் அருகில் துணை மின் நிலையம் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் அதிகளவில் வைக்கப்பட்டு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

The post பைபைக் தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article