பைபாஸ் சாலையோரம் உள்ள சர்வீஸ்சாலை வேகத்தடையில் அழிந்துபோன வெள்ளை வர்ணம்

4 days ago 3

கரூர், மே 15: கரூர்- திருச்சி பைபாஸ் சாலையோரம் உள்ள சர்வீஸ் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் மீது வர்ணம் பூச விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் சுக்காலியூர் பகுதியில் இருந்து திருச்சி வரை பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த சாலையில், வெங்ககல்பட்டி, சீத்தப்பட்டி, உப்பிடமங்கலம், வீரராக்கியம் போன்ற பகுதிகளில் கிராம பகுதிகளுக்கு சாலை பிரியும் பகுதிகளில் மேம்பாலம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த மேம்பாலத்தை ஒட்டி, கிராமப் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மேம்பாலத்தை அடையும் வகையில் சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சர்வீஸ் சாலைகள் அனைத்திலும் வேகத்தடைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

இதில், சில சர்வீஸ் சாலைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் மீது வர்ணம் அழிந்த நிலையில் உள்ளதால், அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்படுகிறது. இதே போன்ற விபத்துக்கள், சீத்தப்பட்டி மேம்பாலத்தை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலையிலும் அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த சர்வீஸ் சாலையில் உள்ள வேகத்தடை மீது வர்ணம் பூசப்படாமல், வர்ணம் அழிந்த நிலையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் சர்வீஸ் சாலைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகள் மீது வெள்ளை வர்ணம் பூச தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post பைபாஸ் சாலையோரம் உள்ள சர்வீஸ்சாலை வேகத்தடையில் அழிந்துபோன வெள்ளை வர்ணம் appeared first on Dinakaran.

Read Entire Article