வாஷிங்டன்,
பிரபல ஹாலிவுட் திகில் திரைப்படம் பைனல் டெஸ்டினேஷன். இதன் முதல் பாகம் கடந்த 2000-ம் ஆண்டு வெளியானது. இதில், அலி லார்டர், டோனி டோட், டெவோன் சாவா, கெர் ஸ்மித், சீன் வில்லியம் ஸ்காட், மேரி எலிசபெத் வின்ஸ்டெட் உள்ளிட்டொர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து, இதுவரை இதன் 5 பாகங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 'பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்' என்ற 6-வது பாகம் உருவாகி உள்ளது. இதில் மறைந்த நடிகர் டோனி டோட், பிரெக் பாசிங்கர், தியோ பிரியோன்ஸ், ரிச்சர்ட் ஹார்மன், குயின்டெசா ஸ்விண்டெல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் டிரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதில், 'பைனல் டெஸ்டினேஷன் பிளட்லைன்ஸ்' படம் வரும் மே மாதம் 16-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.