பைக்கில் லிப்ட் தர மறுத்த வாலிபரை வீட்டிற்கே சென்று தாக்கிய வழக்கறிஞர் கைது: அயனாவரத்தில் பரபரப்பு

2 months ago 7

பெரம்பூர்: அயனாவரத்தில் லிப்ட் தரமறுத்த நபரை வீட்டிற்கு சென்று அடித்து காயப்படுத்திய வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர். சென்னை அயனாவரம், வசந்தா கார்டன் 2வது தெருவை சேர்ந்தவர் இனியவன் (18). கடந்த 3 நாட்களுக்கு முன்பு தனது பைக்கில் அயனாவரம் மதுரை தெரு வழியாக சென்று கொண்டிருந்தார். அப்பொழுது, அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வண்டியை வழிமறித்து லிப்ட் கேட்டுள்ளார். ஆனால், இனியவன் லிப்ட் தர முடியாது எனக்கூறி சென்றுவிட்டார். இதை, மனதில் வைத்துக்கொண்டு கடந்த 22ம்தேதி அவரது வீட்டிற்கு சென்ற பிரகாஷ், இனியவனை சரமாரியாக தாக்கி, அருகில் கிடந்த கட்டையால் மண்டையில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த இனியவன் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, இதுகுறித்து அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அயனாவரம் இன்ஸ்பெக்டர் பரணிநாதன் தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி நேற்று முன்தினம் அயனாவரம் வசந்தா கார்டன் முதல் தெருவை சேர்ந்த பிரகாஷ் என்கிற நரம்பு பிரகாஷ் (38) என்பவரை கைது செய்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பைக்கில் லிப்ட் தர மறுத்த வாலிபரை வீட்டிற்கே சென்று தாக்கிய வழக்கறிஞர் கைது: அயனாவரத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article