லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை நேர்ந்தவர் ஷாருக் கான்(28). போலீஸ் கான்ஸ்டபிளான இவர், அஜிஸ்கஞ்ச் என்ற பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் அறுந்து கிடந்த மாஞ்சால் நூலானது, ஷாருக் கானின் கழுத்தில் சிக்கியது. மாஞ்சா நூல் அவரது கழுத்தை அறுத்ததில், நிலைதடுமாடி அவர் கீழே விழுந்தார்.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாஞ்சா நூல் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்;
" சீனாவை சேர்ந்த மாஞ்சா நூலை சட்டவிரோதமாக இங்கு சிலர் பயன்படுத்தி பட்டம் விடுகின்றனர். மாஞ்சா நூலால் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன. சீன மாஞ்சா நூலை ரகசியமாக விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்." என்றார்.