பண்ருட்டி, மே 16: பண்ருட்டி அடுத்த வீரப்பெருமாநல்லூரை சேர்ந்தவர் பாண்டியன் (33), திருமணமாகாதவர். இவர் நேற்று அதே பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிவிட்டு பிற்பகல் தனது பைக்கில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். வீரப்பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வந்துகொண்டிருந்தபோது கள்ளக்குறிச்சியில் இருந்து பண்ருட்டி வழியாக கடலூர் செல்லும் தனியார் பேருந்து வேகத்தடை மீது செல்லாமல் இருக்க சாலையின் ஓரமாக சென்றபோது பைக் மீது மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தனியார் பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். ஆத்திரமடைந்த பொதுமக்கள் தனியார் பேருந்தை அடித்து நொறுக்கி உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சரண்யா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பாண்டியன் உடலை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பைக் மீது பஸ் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.