சென்னை: போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265 கோடியை குறுகிய காலக் கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஓய்வு, விருப்பு ஓய்வு, உயிரிழந்த தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.265.44 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு போக்குவரத்துத் துறை தலைவர் அலுவலகம் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.