கோவை, பிப். 10: கோவை சுண்டக்காமுத்தூர் ரோட்டில் பேரூர் பெரிய குளம் உள்ளது. இந்த குளக்கரையின் சாலையோரத்தில் கட்டட கழிவுகள், கோழி கழிவுகள் போன்றவை கொட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பேரூர் குளக்கரை சாலையோரத்தில் காலாவதியான ஆவின்பால் பாக்கெட், தனியார் நிறுவனங்களில் பால் பாக்கெட்கள் நேற்று குவிந்து கிடந்தது. இதில், அரைலிட்டர், கால் லிட்டர் பால் பாக்கெட்டுகள் இருந்தது.
அதிகாலை அல்லது இரவு நேரத்தில் வந்து காலாவதியான பால் பாக்கெட்டுகளை கொட்டி சென்று இருக்கலாம் என தெரிகிறது. இந்த காலாவதியான பால் பாக்கெட்டுகளில் இருந்து துர்நாற்றம் வீச துவங்கியுள்ளது. இதையடுத்து, இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post பேரூர் குளக்கரையில் காலாவதியான பால் பாக்கெட் குவியல் appeared first on Dinakaran.