பேருந்துகளில் சுமைகளுக்கு கட்டணம் - மாநகரப் போக்குவரத்துக் கழகம் விளக்கம்

2 months ago 13
மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிகள் கொண்டு செல்லும் பொருட்களுக்கான சுமை கட்டணம் பற்றிய புகார்கள், கருத்துகள் அடிப்படையில் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறிய அளவிலான பைகள், பெட்டிகள், லேப் டாப், வீல்சேர் போன்ற பொருட்களுக்கு கட்டணம் இல்லை என்றும், பெரிய பெட்டிகள், பார்சல்களுக்கு ஒரு பயணிக்கான கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 கிலோ எடையுள்ள பொருட்களை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்றும் வணிகப் பொருட்களுக்கு கட்டணம் உண்டு என்றும் அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பயணிகள் இல்லாத சுமைகள் தனியாக பேருந்தில் அனுமதிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
Read Entire Article