பேராவூரணியில் கலை திருவிழா போட்டிகள்: வடகிழக்கு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை

2 months ago 10

பேராவூரணி ,நவ.10: பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், வட்டார அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா (2024-25) போட்டிகளில், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் அதிகமான பரிசுகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளனர்.

வகுப்பு 1-2 பிரிவில், தனிநபர் போட்டிகளான, மழலையர் பாடல், மாறுவேடப் போட்டி, வண்ணம் தீட்டுதல் முதலிய போட்டிகளில் முதலாம் வகுப்பு மாணவி அனுஹாஷினி முதலிடமும், கதை கூறுதல் போட்டியில் ஷிவானிகா முதலிடமும் பெற்றுள்ளனர். வகுப்பு 3-5 பிரிவில், தனிநபர் போட்டிகளான மெல்லிசை பாடல் போட்டியில் ஜுவைரியா, தேசபக்தி பாடல் போட்டியில் ஆதித்தவர்மன், பேச்சுப் போட்டியில் ஐனிக் பிரேமா, மாறுவேடப் போட்டியில் தர்ஷினி ஆகிய நான்கு பேர் முதலிடமும், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் தர்ஷினி இரண்டாம் இடமும் பெற்றுள்ளார்.

வகுப்பு 3-5 பிரிவில், குழு போட்டியான கிராமிய நடனப் போட்டியில் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர். கலந்து கொண்ட பத்து போட்டிகளில், 9 போட்டிகளில் முதலிடமும், 1 போட்டியில் இரண்டாம் இடமும் பெற்று பேராவூரணி ஒன்றிய அளவில் வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை எம்எல்ஏ அசோக்குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், பள்ளி மேலாண்மை குழு தலைவி நித்யா, மக்கள் பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், பேரூராட்சி கவுன்சிலர் ஹபீபா ஃபாரூக், பள்ளி பொறுப்புத் தலைமை ஆசிரியர் காஜா முகைதீன், இடைநிலை ஆசிரியர்கள் ரேணுகா, சுபா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

The post பேராவூரணியில் கலை திருவிழா போட்டிகள்: வடகிழக்கு அரசு பள்ளி மாணவர்கள் சாதனை appeared first on Dinakaran.

Read Entire Article