பேராசிரியை நிகிதா மீது மேலும் ஒரு புகார் மனு... சென்னையிலும் கைவரிசை காட்டியது அம்பலம்

3 hours ago 1

சென்னை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார். தனது காரில் இருந்த நகைகள் மாயம் என மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஆலம்பட்டியை சேர்ந்த பேராசிரியை நிகிதா என்பவர் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரிக்க அழைத்து சென்று தாக்கியதில் அஜித்குமார் இறந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே நகை மாயமானதாக புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், பேராசிரியை நிகிதா சென்னையிலும் வேலை வாங்கி தருவதாக கூறி கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக எழும்பூர் சேர் காலனி பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் எழும்பூர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

மதுரை திருமங்கலம் ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவியரசு, அவரது மனைவி சிவகாமி, சகோதரி நிகிதா ஆகியோர் நண்பர் ஒருவர் மூலமாக எனக்கு அறிமுகமாகினார்கள். கடந்த 2011-ம் ஆண்டு 3 பேரும் சேர்ந்து என்னிடம் தலைமை செயலகத்தில் எனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார்கள்.

இதை நம்பி நான் ரூ.48 லட்சம் பணத்தை கொடுத்தேன். இதன் பிறகு அவர்கள் எனக்கு வேலை வாங்கி கொடுக்காமல மோசடி செய்து ஏமாற்றி விட்டனர். இந்த நிலையில் திருப்புவனம் காவலாளி அஜித்குமார் வழக்கு தொடர்பாக நடத்திய விசாரணையில் அவர்களது மோசடியும் வெளியில் வந்துள்ளது. எனவே நிகிதா உள்ளிட்ட 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article