'பேபி ஜான்' படத்தின் டிரெய்லர் வெளியானது

6 months ago 20

ஷங்கரின் உதவி இயக்குனராக அறிமுகமாகி, இன்று பல ஹிட் படங்களை இயக்கி வருபவர் பிரபல இயக்குனர் அட்லி. இவர் 'ஜவான்' படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது. தற்போது பாலிவுட்டில் அட்லி மற்றும் அவரது மனைவி பிரியாவின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் முராத் கெதானியின் சினி-1 ஸ்டுடியோஸ் ஆகியவை இணைந்து "பேபி ஜான்" என்ற படத்தை தயாரித்துள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் 'தெறி'. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படம் இந்தியில் தற்போது உருவாகியுள்ளது.

அட்லியின் உதவி இயக்குனர்களில் ஒருவரான காலிஸ் என்பவர் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் நடித்த வேடத்தில் பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். இந்த படத்தின் நாயகிகளாக கீர்த்தி சுரேஷ் மற்றும் வாமிகா கபி ஆகியோர் நடித்து வருகின்றனர். மைக்கேல் படத்தின் ஒளிப்பதிவாளர் கிரண் கவுஷிக் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இசையமைப்பாளர் தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். 

இந்தப் படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் 'நைன் மடாக்கா' என்ற பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலானது. இந்தநிலையில் தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இப்படம் கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு டிசம்பர் 25 -ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

Action, fire, and unstoppable GOOD VIBES! Baby John brings it all! ❤️#BabyJohnTrailer out now!: https://t.co/Nhrt9Xnbaq#BabyJohn will see you in the cinemas this Christmas, on Dec 25.#JyotiDeshpande @MuradKhetani @priyaatlee @Atlee_dir @Varun_dvn @KeerthyOfficialpic.twitter.com/8R1L4iiIw9

— Jio Studios (@jiostudios) December 9, 2024

Read Entire Article