பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு

13 hours ago 3

தேவையான பொருட்கள்

1/4 கிலோ பேபி உருளைக்கிழங்குகள்
அரை மூடி தேங்காய்

வறுத்து அரைப்பதற்கு:

1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
1 பெரிய வெங்காயம்
1/2 கப் சாம்பார் வெங்காயம்
5 வற்றல் மிளகாய்
1 டேபிள் ஸ்பூன் முழு தனியா
1 டீஸ்பூன் சீரகம்
1 டீஸ்பூன் சோம்பு
1 டீஸ்பூன் கசகசா
கறிவேப்பிலை
1 டீஸ்பூன் குழம்பு மசாலா தூள்
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
சிறிய நெல்லிக்காய் அளவுபுளி
தேவையான அளவுஉப்பு
கரிவேப்பிலை

தாளிக்க:

1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
1/4 டீஸ்பூன் கடுகு
5சாம்பார் வெங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

பேபி உருளைக்கிழங்குகளை வேக வைத்து, தோல் உரித்து தயாராக எடுத்து வைத்துக்கொள்ளவும்.வறுக்க தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.ஒரு கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா,சீரகம்,சோம்பு, கசகசா, கறிவேப்பிலை வற்றல் சேர்த்து வதக்கவும்.பின்னர் நறுக்கி வைத்துள்ள இரண்டு வகை வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். புளியும் சேர்த்து வதக்கவும்.அத்துடன் மஞ்சள் தூள், குழம்பு மசாலா தூள் சேர்த்து கலந்து, ஒரு நிமிடம் வதக்கி விடவும்.அரை மூடி தேங்காயை துண்டுகள் செய்து மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.அத்துடன் வறுத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து தயாராக வைக்கவும். ஒரு பாத்திரத்தை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை,வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொரிந்ததும் வேகவைத்து வைத்துள்ள பேபி உருளைக்கிழங்குகளை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலா விழுதை சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து,மேலும் கொஞ்சம் தண்ணீர் விட்டு நன்றாக கலந்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.இப்போது மிகவும் சுவையான பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு ரெடி. பின்னர் எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.இப்போது மிகவும் சுவையான பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு சுவைக்கத்தயார். இந்த குழம்பு சாதம்,இட்லி, தோசை,சப்பாத்தி போன்ற எல்லா உணவுடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

The post பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு appeared first on Dinakaran.

Read Entire Article