பேச்சுவார்த்தை நடத்தி விசைத்தறியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

1 day ago 3

சென்னை: பேச்சுவார்த்தை நடத்தி விசைத்தறியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் வலியுறுத்தி உள்ளார். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவர்களை நம்பி மறைமுகமாக பல லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் உள்ளன.

இந்நிலையில், மூன்று முறை உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தங்களது விசைத்தறியில் வேலை செய்யும் கூலி ஆட்களின் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், தற்போது வழங்கப்படும் கூலி மிகமிகக் குறைவு என்றும், எனவே, தங்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டி காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பேச்சுவார்த்தை நடத்தி விசைத்தறியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் வலியுறுத்தி உள்ளார். வேலை நிறுத்தம் காரணமாக லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு என பேரவையில் பேசினார். 2 ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கூலி குறைத்து வழங்கப்படுவதாக கூறினார். கூலி உயர்வு குறித்து ஜவுளி உற்பத்தியாளர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பழனிசாமி வலியுறுத்தினார்.

மேலும் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் விசைத் தறி தொழிலாளர்கள் போராட்டத்திற்கு மிக விரைவில் உடனடியாக தீர்வு காண அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பேரவையில் அமைச்சர்கள் பதில் அளித்தனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலி உயர்வு கோரி விசைத்தறி கூலித் தொழிலாளர்கள் மேற்கொண்டு வரும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

The post பேச்சுவார்த்தை நடத்தி விசைத்தறியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்றுக: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article