பேச்சிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் என்சிசி தின விழா

2 months ago 7

குலசேகரம்,நவ.26: பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட மேல்நிலைப் பள்ளியில் நேஷனல் கேடட் கார்ப்ஸ் தின விழா கொண்டாடப்பட்டது. இப்பள்ளியில் 50 மாணாக்கர்களைக் கொண்ட என்சிசி கேடட் உடற்கல்வி ஆசிரியர் சந்திரசோமு தலைமையில் செயல்பட்டு வருகிறது. இன்றைய இளைஞர்களை நாளைய பொறுப்புள்ள குடிமக்களாக வடிவமைக்கும் நோக்கில், என்சிசி யின் 76-ஆவது எழுச்சி தினத்தன்று பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் சஜிதா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post பேச்சிப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் என்சிசி தின விழா appeared first on Dinakaran.

Read Entire Article