பேசின் பாலம் விரிவுப்படுத்தப்படுமா? - அமைச்சர் எ.வ.வேலு பதில்

1 day ago 3

சென்னை,

தமிழக சட்டசபையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகர், வியாசர்பாடியில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் பேசின் பாலத்தை கடந்த செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், எனவே இதனை அகலப்படுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பேசின் பாலம் மிகவும் நெரிசலான பகுதிதான். எனவே அந்த பாலத்தை விரிவு செய்யமாலா? அல்லது புதிய பாலம் கட்டலாமா என்பது குறித்து தொழில்நுட்ப வல்லுநர்களை கொண்டு ஆய்வு செய்து சாத்தியக்கூறு இருந்தால் இந்த ஆண்டே பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றபோது, சுமார் 71 பாலங்களின் கட்டுமானப் பணிகள் நிலுவையில் இருந்தன. அப்பாலங்கள் ஒன்றன்பின் ஒன்றாக ஆய்வு செய்யப்பட்டு, தற்போது வரை சுமார் 35 பாலங்களின் பணிகள் நிறைவடைந்துள்ளன என தெரிவித்தார்.

Read Entire Article