பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கட்டபொம்மன் பிறந்தநாள் விழா

4 months ago 14

கருங்கல், ஜன.9: கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் ஒவ்வொரு நாளுக்குரிய சிறப்புகளை மாணவர்களுக்கு தெரிய வைப்பது வழக்கம். அதன் படி வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழா, கொண்டாடப்பட்டது. பள்ளித் தலைவர் டாக்டர் தங்கசுவாமி தலைமை தாங்கினார். முதுநிலை முதல்வர் மற்றும் முதல்வர் முன்னிலை வகித்தனர். கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு மழலையர் பிரிவு மாணவர்கள் கட்டபொம்மன் போன்று வேடமணிந்து அவரின் வீர வசனங்களை பேசினர். மேலும் கட்டபொம்மனின் வாழ்க்கை வரலாறு பற்றிய சிறப்புரை மற்றும் உரையாடல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வானது மாணவர்களின் படிப்பாற்றலோடு படைப்பாற்றலும் மேம்பட தூண்டும் விதமாகவும் நாட்டுப்பற்று, மொழிப்பற்று வளர வழிகாட்டும் விதமாகவும் அமைந்திருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தின் மேற்பார்வையில் ஆசிரியர்களும், சக பணியாளர்களும் செய்திருந்தனர்.

The post பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கட்டபொம்மன் பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Read Entire Article