பெல்ஜியம் கார் ரேஸில் நடிகர் அஜித் குமார் 2வது இடம்: ரசிகர்கள் உற்சாகம்

2 hours ago 2

பிரசெல்ஸ்: நடிகரும் கார் ரேஸருமான அஜித் குமார் தலைமையிலான அஜித் குமார் ரேஸிங் அணி, பெல்ஜியத்தில் நடைபெற்ற GT4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது.

இந்த வெற்றி தொடர்பான தகவல், அஜித் குமார் ரேஸிங் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த செய்தி அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. முன்னதாக அஜித்தின் கார் ரேஸ் அணி, துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேஸ் போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்தது. அதை தொடர்ந்து இத்தாலியில் நடைபெற்ற ரேஸிலும், மூன்றாவது இடமும், பெல்ஜியத்தில் நடந்த போட்டியில் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றியை கார் ரேஸில் அஜித்குமார் பெற்றுள்ளார். ‘சில ஆண்டுகளுக்கு முன் அஜித் கார் ரேஸில் பங்கேற்றபோது வெற்றி பெறுவது கடினமாக இருந்தது. ஆனால் தொடர் விடாமுயற்சி காரணமாக அவர் இந்த சாதனைகளை செய்திருக்கிறார்’ என நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

The post பெல்ஜியம் கார் ரேஸில் நடிகர் அஜித் குமார் 2வது இடம்: ரசிகர்கள் உற்சாகம் appeared first on Dinakaran.

Read Entire Article