பெல் நிறுவனத்தில் 350 இன்ஜினியர்கள்

2 weeks ago 5

பணியிடங்கள் விவரம்:

1. Probationary Engineer: 200 இடங்கள். சம்பளம்: ரூ.40,000- 1,40,000. வயது: 25க்குள். தகுதி: எலக்ட்ரானிக்ஸ்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேசன் ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
2. Probationary Engineer: 150 இடங்கள். சம்பளம்: ரூ.40,000-1,40,000. வயது: 25க்குள். தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
1.1.2025 தேதியின்படி வயது வரம்பு கணக்கிடப்படும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆணடுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும் தளர்வு அளிக்கப்படும்.

கட்டணம்: பொது/ஒபிசி/பொருளாதார பிற்பட்டோருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
விண்ணப்பதாரர்களுக்கு சிபிடி தேர்வு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.
www.bel-india.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.01.2025.

The post பெல் நிறுவனத்தில் 350 இன்ஜினியர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article