பெர்த் டெஸ்ட் : அரைசதமடித்த கே.எல். ராகுல்

4 hours ago 2

பெர்த்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை (2024-25) தொடரின் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 150 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 41 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் அதிகபட்சமாக ஜோஷ் ஹேசில்வுட் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 104 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஸ்டார்க் 26 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அபாரமாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 46 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் களமிறங்கினர். முதல் இன்னிங்ஸ் போல் அல்லாமல் இந்த முறை ஆஸ்திரேலிய பந்துவீச்சை கவனமாக எதிர்கொண்ட இவர்கள் அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து கொடுத்தனர்.

சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் முதலில் அரைசதம் அடித்துள்ளார் . இதன் மூலம் நடப்பு பார்டர் - கவாஸ்கர் கோப்பை (2024-25) தொடரில் அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

இதனை தொடர்ந்து மறுபுறம் நிலைத்து ஆடிய கேஎல் ராகுல் அரைசதமடித்து அசத்தினார் . டெஸ்ட் போட்டியில் இது அவரது 16-வது அரைசதம் ஆகும். இந்திய அணி தற்போது விக்கெட் இழப்பின்றி 150 ரன்களை கடந்து விளையாடி வருகிறது .

Read Entire Article