பூரன், பவுல்ட் அபாரம்... நைட் ரைடர்ஸை வீழ்த்திய எம்.ஐ. நியூயார்க்

6 hours ago 3

புளோரிடா,

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் - எம்.ஐ. நியூயார்க் அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற நியூயார்க் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. நைட் ரைடர்ஸ் தரப்பில் அதிகபட்சமாக ரூதர்போர்டு 84 ரன்கள் எடுத்தார். நியூயார்க் தரப்பில் அபாரமாக பந்துவீசிய பவுல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த நியூயார்க் அணி 17.5 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 155 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நியூயார்க் தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 62 ரன்கள் எடுத்தார்.

Read Entire Article