பெருமழை பெய்தாலும் எதிர்கொள்ள தமிழக அரசு தயார் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2 months ago 8
சென்னை கண்ணகி நகரில் மாற்றுத்திறனாளிகளுக்கான 'விழுதுகள்' சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சுமார் 3 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையம், மாற்றுத்திறனாளிகளுக்கு உடல், மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகள் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எழில் நகரில், "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் ஐந்து வகுப்பறைகளுடன் சீரமைக்கப்பட்டுள்ள பள்ளிக் கட்டடத்தில் செயல்பட்டு வரும் மாண்டசரி மழலையர் வகுப்புகளை முதலமைச்சர் பார்வையிட்டார். பின்னர் பேட்டியளித்த அவர், பெருமழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
Read Entire Article